ரெட்மி நிறுவனம் தற்போது புதிய ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ரெட்மிபுக் 16 லேப்டாப் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
ரெட்மிபுக் 16 லேப்டாப் 16.1 இன்ச் எப்எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் 10 வது ஜென் இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 பிராசஸர் வசதியை கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இது இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ் மற்றும் 2 ஜிபி டிடிஆர் 5 என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 350 ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
இந்த லேப்டாப் 16ஜிபி வரை டிடிஆர் 4 3200 மெகா ஹெர்ட்ஸ் ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலில் 46Wh பேட்டரி ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் 65W USB-C வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிப்பதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11, புளூடூத் 5.1, யுஎஸ்பி 3.1 ஜென்1 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.