ஏடிஎம் மூலம் நடக்கும் குற்ற சம்பவங்களைத் தடுக்க டெல்லி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு சில நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது.
ஏடிஎம்மில் இருந்து 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை நீங்கள் பெற விரும்பினால் நிச்சயம் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண் உங்களுடன் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

பண பரிவர்த்தனையின் அளவு கூடும்போது ஓடிபி நமது எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை ஏடிஎம் பின் நம்பருடன் சேர்த்து பாஸ்வேர்டு போல செலுத்துதல் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபரே பணத்தினை எடுக்க முடியும்.
இந்த வசதியை நாட்டில் முதல் முறையாக கனரா வங்கி அறிமுகம் செய்துள்ளது, இது விரிவடைந்து அனைத்து வங்கிகளிலும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த விதிமுறையின் மூலம் நிச்சயம் ஏடிஎம் களில் நடக்கும் மோசடிகளைக் குறைக்க முடியும்.
பண பரிவர்த்தனையின் அளவினை மிகச் சிறிய அளவில் பண்ணுவதன்மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும். இந்த மாதிரியான பிரச்சினைகளை முற்றிலும் தவிர்க்க டிஜிட்டல் முறையே சிறப்பானதாகும்.