ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம், தனது பிளான்களை மாற்றி வாடிக்கையாளர்களை கவர் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிஎஸ்என்எல் தற்போது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இது டேட்டா பயனை மட்டுமே வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதன் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும், இந்தத் திட்டத்தின்படி 200 ஜிபி சேகரிக்கப்பட்ட டேட்டா கிடைகவுள்ளது.

இந்தத் திட்டத்தில், வாய்ஸ் கால் அல்லது எஸ்எம்எஸ் பயன்கள் இல்லை என்பதே ஒரு குறையாகும். இதன் விலையானது ரூ. 698 ஆகும்.
தற்போது ரூ. 698 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் இணையதளத்தில் உள்ளது. இந்த திட்டம் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டத்தில் மட்டுமே செயல்படுவதோடு, இந்த வட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த ரீசார்ஜ் பெற முடியும்.
இது அடுத்த மாதம் நவம்பர் 15 ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று கூறப்படுகிறது.