ஜாப்ரா நிறுவனம் இந்தியாவில் வயர்லெஸ் இயர்பட்ஸினை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸுக்கு ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி என்று பெயர். இந்த இயர்பட்ஸுக்கு இரண்டு வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.
1. ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இயர்பட்ஸின் விலை – ரூ. 16,999
இந்த இயர்போனின் விற்பனையானது மார்ச் 11 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த இயர்போன் கையாளுவதற்கு மிகவும் எளிதான வகையில் 22 சதவீதம் சிறிய அளவினதாக உள்ளது. மேலும் இது மற்ற இயர்போன்களைவிட, காதுகளில் பொருத்துவதற்கு வசதியாக உள்ளது.

இந்த இயர்போன் 28 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வசதி கொண்டுள்ளது. இந்த ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இயர்பட்ஸ் பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியினைக் கொண்டுள்ளது. அதாவது சுற்றுப் புறத்தில் உள்ள சத்தத்தினை இது தேவையான நேரத்தில் குறைக்கச் செய்கின்றது.
மேலும் இந்த இயர்போன் மூலம் வெளிப்புற சத்தத்தை நாம் கேட்க விரும்பும்போது கேட்கக்கூடிய வசதியும் கொண்டதாக உள்ளது. இது நான்கு மைக்ரோபோன் தொழில்நுட்பம் வசதியினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங், ரிலையபிள் ட்ரூ வயர்லெஸ் கனெக்டிவிட்டி போன்றவற்றினையும் கொண்டுள்ளது.