Apps

ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் நீக்கப்படுமா? தொடரும் சர்ச்சைகள்!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது  மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.

டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது.

இளைஞர்களை மட்டுமன்றி சாதாரண குடும்ப உறுப்பினர்களையும் பயன்படுத்த தூண்டுவிதமாக இந்த செயலி அமைந்துள்ளது. ஆனால் அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்திக்கும் ஒரு செயலியாகவும் இருந்து வருகின்றது.

ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் நீக்கப்படுமா? தொடரும் சர்ச்சைகள்!!

இதற்கு இடைக்காலத் தடைவிதிப்பு என்ற ஒன்று பழகிவிட்டது என்று கூட கூறலாம். கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு நான்கு நட்சத்திர குறியீடுகள் வரை வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதுடன்  ஒரு நட்சத்திர குறியீட்டுக்கு மாறியுள்ளது. 

அதாவது டிக்டாக் செயலியில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் சரி என்பதுபோல் ஒரு வீடியோ ஒன்று வெளியாக, இதற்கு பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாக, ப்ளே ஸ்டோரில்  டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி பயனர்கள் பலரும் கூறி வருகின்றனர். பலர் இந்த சம்பவத்திற்குப் பின்னர் தொடர்ந்து அன் இன்ஸ்டால் செய்தும் வருகின்றனர்.

Related posts

JioMeet செயலிக்கு போட்டியாக ஏர்டெல்லின் ப்ளூஜீன்ஸ்!!

TechNews Tamil

52 செயலிகளை தடை செய்வதாய் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்திய அரசாங்கம்!!

TechNews Tamil

பாதுகாப்பின்மை அபாயம்:: ஃபேஸ்புக்கின் 267 மில்லியன் கணக்குகளின் சுய தரவுகள் விற்பனை!!

TechNews Tamil