ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.
தற்போது ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபர்களை அளித்து வருகிறது, அந்த வகையில் பிஎஸ்என்எல் அனைவருக்கும் பிடித்த ஒரு நெட்வொர்க்காக மாறி வருகிறது.
இதன் புதிய பிளான்கள், ஆஃபர்கள், கட்டணங்கள் என அனைத்துமே மிகச் சிறப்பாக உள்ளது. இதனால் தற்போது பலரும் பிஎஸ்என்எல் க்கு மாற ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், மற்ற நெட்வொர்க்கில் இருந்து மாறுவோர்களுக்கு பிஎஸ்என்எல் 50 ரூபாயினைக் கட்டணமாக வசூலிக்கிறது.
ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் ரூ.30 ரூபாயையும் ஜியோ கட்டணம் ஏதும் வசிக்காமலும் போர்ட் மாற்றித் தருகின்றன.
ஜியோ மீது அதிருப்தியில் உள்ள பயனர்கள் பலரும் போர்ட் மாறலாம் என்றே முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் பிஎஸ்என்எல் தனது சிம் விலையினை குறைத்தால் பெரும் வாய்ப்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.