Information Technology

ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் செயலிழப்பது ஏன்?

உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு பிரியர்களுக்கு வந்த சோதனை இதுதான், சில தினங்களுக்கு முன் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் மூன்றிலும் புகைப்படங்கள் எதையும் பார்க்க முடியவில்லை.

அந்த சில மணி நேரங்கள் உலகமே ஸ்தம்பித்து விட்டது, காரணம் ஸ்மார்ட் போன் உடல் என்றால் அதன் உயிர் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் தான். மற்ற அப்ளிகேஷன் இருந்தாலும், இவை மூன்றும் தான் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கும்.


ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் செயலிழப்பது ஏன்?

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பட்சத்தில், இந்த மூன்றில் குறைந்தபட்சம் இரண்டைப் பயன்படுத்தாத யாரையும் பார்க்க முடியாது. ஸ்மார்ட் போன் மீதான மோகத்திற்கு பல காரணங்கள் இருப்பினும், அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது இந்த மூன்று அப்ளிகேஷன்களே ஆகும். போனில் மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்தும் இந்த அப்ளிகேஷனில் முடக்கம் என்றால் நெஞ்சம் கணக்கத்தான் செய்கிறது.

அதுவும் ஓரே நேரத்தில் முடக்கம் ஏற்படுவதால், வாழ்க்கை சில மணி நேரங்களுக்கு ஸ்தம்பித்துவிடுகிறது. அதற்குக் காரணம் வேறு எதுவும் இல்லை. இவை மூன்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அப்ளிகேஷன்கள், அதனால் ஒன்றில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டால், மற்ற இரண்டும் பாதிக்கப்படுகிறது.

Related posts

ரூ. 2121 விலையில் அசத்தலான சலுகைகளுடன் ஜியோவின் புதிய திட்டம்!!

TechNews Tamil

ஊரடங்கு உத்தரவு: பி.எஸ்.என்.எல்லைத் தொடர்ந்து இலவச சலுகைகளை வழங்கியுள்ள ஜியோ!!

TechNews Tamil

இன்றோடு ஓய்வு பெற்ற 78,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள்!!

TechNews Tamil