Apps

பிரேசிலில் அறிமுகமாகியுள்ள வாட்ஸ் ஆப்பின் பேமண்ட் சேவை!!

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி வாட்ஸ் ஆப்பின் பேமண்ட் சேவையானது பிரேசிலில் அறிமுகமாகியுள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் யூபிஐ  சார்ந்து இயங்கும் பணப்பரிமாற்ற சேவையை வழங்க உள்ளது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை இயக்க தேசிய உரிமக் கழகம் எனப்படும் NPCI ஒப்புதல் வழங்கியது.

பிரேசிலில் அறிமுகமாகியுள்ள வாட்ஸ் ஆப்பின் பேமண்ட் சேவை!!

பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப், இந்தியாவினை அடுத்து பிரேசிலில்தான் அதிகப் பயனர்களைக் கொண்டுள்ளது. அதாவது 12 கோடி பயனர்களைக் கொண்டதாக உள்ளது.

இந்த டிஜிட்டல் கட்டண சேவை ஒரு கட்டமாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று ஆர்பிஐ கூறி இருந்ததன்படி, வாட்ஸ்அப் பே அம்சம் முதல் கட்டமாக பிரேசிலில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது அடுத்த கட்டமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

3 நாட்களுக்கு Amazon Fab Phone Fest Sale!!

TechNews Tamil

Amazon Fab Phones Fest – ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி அறிவிப்பு!

TechNews Tamil

ஜூம் செயலி போனால் என்ன? இதோ வந்துடுச்சு கூகுளின் ஹேங்அவுட்ஸ் மீட்!

TechNews Tamil