Apps

கூகுளையே திணறவிட்ட வாட்ஸ்ஆப்பின் புதிய சேவை!

வாட்ஸ் அப் மற்ற அப்களை விட எளிதில் பிரபலமாகக் காரணம், பயன்படுத்தும் முறை மிக எளிதானது என்பதாலேயே ஆகும்.

மெசெஜ்க்கு அடுத்தபடியாக, வாட்ஸ்அப் தான், அனைவரும் பயன்படுத்தும்படி சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அப் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஒன்றாக உள்ளது.

தற்போது வாட்ச் அப்பை மெருகூட்ட புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது. பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் பயனர்கள் மட்டுமின்றி கூகுளும் ஆச்சரியப்படும் ஒரு புதிய வசதியினை வாட்ஸ்அப்பில் கொண்டு வந்துள்ளது.

கூகுளையே திணறவிட்ட வாட்ஸ்ஆப்பின் புதிய சேவை!

வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் பாதுகாப்பை பாதிக்கக்கூடிய குறைபாடு ஒன்று இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த பாதுகாப்பு ஓட்டையின் வழியாக நீங்கள் அனுப்பும் மெசேஜை மற்றொருவரால் ஹேக் செய்து கையாள முடியும் சூழ்நிலை நிலவி வந்தது. அதன்பின்னர் இந்தக் குறைகளானது களையப்பட்டது.

தற்போது வாட்ஸ்ஆப் மெசேஜ்களை யாராலும் கண்காணிக்க முடியாத வகையில் புதியதொரு ஆப்ஷனை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இனி மக்கள் பயமின்றி இந்த செயலியை இனி பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

மேலும் இந்த முறையில் சாட்டிங் பேக்அப் செய்யப்படாது என்றும், அதற்கான புதிய பாஸ்வேர்டு முறையும் இத்துடன் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

இனி வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை கூகுளாலும் கண்ணகாணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாஸ்வேர்டு மறந்துவிட்டால், குறுந்தகவல்களை பேக் அப் செய்ய முடியாது.

Related posts

மலிவு விலையில் ஜியோ செயலியினை பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளான்கள்!!

TechNews Tamil

இளைஞர்களுக்கு ஆஃபர்களை அள்ளி இறைத்த அமேசான்!

TechNews Tamil

ஃபேஸ்புக்கில் வந்த புதிய அம்சம்.. ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை இனி இன்ஸ்டாவில் பகிரலாம்

TechNews Tamil