வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இப்போது வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது வாட்ஸ் அப் செயலியின் தனியுரிமை கொள்கை மாற்றப்படுவது குறித்து பயனர்களுக்கு பாப்அப் மெசேஜ் மூலம் நோட்டிபிகேஷனாக வாட்ஸ்அப் அறிவித்துவிட்டது.

அதாவது இந்தப் பாலிசியில் பயனர்கள் வாட்ஸ்அப்பினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் இணையத்தில் எதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது போன்ற பிற இணையப் பயன்பாடுகளையும் கண்காணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவற்றை பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் பகிரப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொள்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாத பயனர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின்னர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் வாட்ஸ் அப் கூறியுள்ளது.
வாட்ஸ் அப்பின் இந்த தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களின் இணைய சுதந்திரத்தைப் பறிப்பதாக வாட்ஸ் அப் பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இதனால் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களை இழக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.