வாட்ஸ் ஆப் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் போலியான தகவல்கள் பரவுவது 70 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது போலியான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ் ஆப் ஒரு புதிய சேவையினை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
அதாவது பார்வேர்ட் மெசேஜ்களுக்கு லென்ஸ் வடிவிலான ஒரு பட்டன் காண்பிக்கப்படும். அந்த லென்ஸ் வடிவை கிளிக் செய்து பார்த்தால் குறிப்பிட்ட பார்வேர்ட் மெசேஜ்ஜின் உண்மைத் தன்மை குறித்து தகவல்களை நம்மால் கண்டறிய முடியும்.

அதன்மூலம் வெப் மூலமாக அந்தத் தகவலானது உண்மையா அல்லது போலியானதா என்று கண்டறியலாம். அதனை அடுத்து வாட்ஸ் ஆப் மற்றுமொரு அம்சத்தினை வெளியிட்டது. அதாவது, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாட்களை/ குறுந்தகவல்களை Forward செய்யும் வரம்பைக் கொண்டுவந்தது.
இதற்கு முன் ஐந்து பேருக்கு ஒரு செய்தியை அனுப்ப பயனர்களை அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தவறான தகவல்கள் பரவுவதை 70 % குறைத்துள்ளது. தற்போது ஊரடங்கினால் அனைவரும் முடங்கி இருக்கும் நிலையில் முன்பைவிட வாட்ஸ் ஆப்பின் பயன்பாடு தற்போது 50% அதிகரித்துள்ளது.