Apps

நான்கு பேருக்கு மேல் வீடியோ அழைப்பில் சேர அனுமதிக்கும் வாட்ஸ் ஆப்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஜூம் பயன்பாட்டால் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது, அதாவது சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஜூம் செயலியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது ஜூம் பயன்பாட்டை பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் போன்றவை ஹேக்கிங்க் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஜூம்செயலிக்கு மாற்று போல் வாட்ஸ்அப் நிறுவனம் நான்கு பேருக்கு மேல் வீடியோ அழைப்பில் சேர அனுமதிக்கும் சேவையினை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த செயலியானது இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் ஆகவுள்ளது.

அதாவது ஊரடங்கு உத்தரவால் ஐடி ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் வீடியோ மூலம் தொடர்பு கொள்ளும் செயலியினையே பிறருடன் கலந்துரையாடப் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்தியா, சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளில் ஜூம் செயலியினைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாட்ஸ் ஆப்பானது 4 பேருக்கு மேல் வீடியோ அழைப்பில் சேர அனுமதிக்கும் புதிய அம்சத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக WABetainfo தெரிவித்துள்ளது.

தற்போது இந்த அம்சத்தை முழு முயற்சியுடன் வாட்ஸ் ஆப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த சேவை நிச்சயம் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இந்த புதிய அம்சம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேடும் வசதி….

TechNews Tamil

வாட்ஸ்அப் பயனர்களைக் கவர்ந்துள்ள கஸ்டம் வால்பேப்பர் அம்சம்!!

TechNews Tamil

கூகுள் நிறுவனத்தின் அசத்தலான ஆப்!!!

TechNews Tamil