வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது ஒரு சிறப்பான அம்சத்தினை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் செயலியில் சமீபத்தில் கஸ்டம் வால் பேப்பர் வசதியினை அறிமுகம் செய்தது.
அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் பிசினஸ் நோக்கத்திற்காக செயலியில் ஷாப்பிங் செய்யும் அம்சமாக கார்ட் என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் நாம் கார்ட் மூலம் சம்பாதித்த தொகையினை வாட்ஸ்அப் மூலம் பே செய்தும் கொள்ளலாம். மேலும் கார்ட் அம்சமானது வாட்ஸ்அப் பிசினஸ் மூலம் வணிகர்களிடம் இருக்கும் பொருட்களை பட்டியலாகக் காட்டும்.
இதனையடுத்து பொருட்களை வாங்க நினைக்கும் பயனர்கள் Cart அம்சம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
மேலும் மற்ற ஆன்லைன் வியாபார வலைதளங்களில் இருப்பதைப் போல் ஆர்ட் டூ கார்ட் மூலம் நமக்கான பொருட்களை கார்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிகின்றது.