வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவையானது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனத்தின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
வாட்ஸ் ஆப் நிறுவனம் யூபிஐ சார்ந்து இயங்கும் பணப்பரிமாற்ற சேவையை வழங்க உள்ளது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கு ஒப்புதல் கேட்டு இந்திய உரிமக் கழகம் எனப்படும் NPCIயிடம் ஒப்புதல் கேட்டு இருந்தது.

இந்த ஒப்புதலுக்குப் பின்னர் இந்தியாவில் யுபிஐ சேவையை வழங்கி வரும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் வாட்ஸ்அப் பே சேவைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் இனி பணம் அனுப்ப முடியும்.
முதற்கட்டமாக இந்த சேவையானது 2 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப், இந்தியாவில் வெளியிட்டுள்ள வாட்ஸ்ஆப் பே அம்சமானது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வாட்ஸ் ஆப் சேவையானது ஒரு கட்டமாக மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் அதன் வரவேற்பினைப் பொறுத்து அடுத்தகட்டமாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையானது வாட்ஸ்அப் சாட் பாக்சின் மூலம் பயனர்களுக்கு பணம் அனுப்பும் வசதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.