வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
வாட்ஸ் ஆப் நிறுவனம் யூபிஐ சார்ந்து இயங்கும் பணப்பரிமாற்ற சேவையை வழங்க முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இன்னும் 6 மாதங்களில் பணத்தினை எளிதில் அனுப்பும் வகையில் வெளியாகும் என்றநிலையில், டிஜிட்டல் பேமெண்ட் சேவையை இயக்க தேசிய உரிமக் கழகம் எனப்படும் NPCI ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஒப்புதல் கிடைக்கும் செய்முறையே, நீண்டகாலம் பிடிக்கும் என்று நினைத்த நிலையில், தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளமையால் விரைவில் வாட்ஸ் அப் பே ஆப் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப், இந்தியாவில் விரைவில் வாட்ஸ்ஆப் பே அம்சத்தினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.