சீனாவில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 12,89,380 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 70,590 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஹலோ ஆப் போன்ற மிக முக்கிய தளங்களில் அதிக அளவில் வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளது.
இதனால் மக்கள் அதிக அளவில் பீதியாகி உள்ளனர், மக்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் குறித்த போலியான செய்திகளை நீக்கக்கோரி, இணைய தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா குறித்த உண்மை நிலவரங்களைப் பதிவிடும் பொருட்டு இந்திய அரசு சமீபத்தில் MyGov Corona Helpdesk என்ற ஆப்பினைத் துவக்கியது.
போலியான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ் ஆப் ஒரு புதிய சேவையினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பார்வேர்ட் மெசேஜ்களுக்கு லென்ஸ் வடிவிலான ஒரு பட்டன் காண்பிக்கப்படும். அந்த லென்ஸ் வடிவை கிளிக் செய்து பார்த்தால் குறிப்பிட்ட பார்வேர்ட் மெசேஜ்ஜின் உண்மைத் தன்மை குறித்து தகவல்களை நம்மால் கண்டறிய முடியும்.
அந்த லென்ஸ் வடிவான பட்டன கிளிக் செய்தபிறகு வாட்ஸ் ஆப் ஒரு பாப் அப் அம்சம் காண்பிக்கும். அதில் வெப் மூலமாக தேட விரும்புகிறீர்களா என்ற ஆப்சன் கிடைக்கும்.
அதன்மூலம் வெப் மூலமாக அந்தத் தகவலானது உண்மையா அல்லது போலியானதா என்று கண்டறியலாம். இந்த நேரத்தில் வெளியான இந்த அம்சம் பாராட்டத்தக்கதாக உள்ளது.