பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட நிறுவனம் வாட்ஸ் அப் ஆகும். ஒரு காலத்தில் மெசேஜ் பயன்பாட்டினை குறுந்தகவல்களை அனுப்ப பயன்படுத்திய பயனர்கள் தற்போது வாட்ஸ் ஆப்பினை முழுவதுமாக நம்பி உள்ளனர்.
சமீபத்தில் iOS 8 என்ற ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தில் இயங்கிவரும் வாட்ஸ்ஆப் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி க்குப் பின் அந்த ஓஎஸ்சில் இயங்காது, என்று தகவல்கள் வெளியாகின.
ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 2.3.7 & அதற்கும் பழைய பதிப்புகளின் கீழான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது. இவர்களுக்கான கெடு தேதி பிப்ரவரி 1 ஆம் தேதி வரை மட்டுமே ஆகும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதாவது தற்போது வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த iOS 9 அல்லது அதற்கு பிறகு வெளியான ஓஎஸ் பதிப்பிற்கு மாறவேண்டும்.
இல்லையேல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கப்படுவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
அதாவது அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கும் இது பொருந்தும். அதேபோல் அனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் ஆப் துண்டிக்கப்படுகிறது.