வாட்ஸ்அப் நிறுவனம், இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என்று தெரிவித்திருந்தது.
விண்டோஸ் துணையிலான அனைத்து போன்களிலும் நிச்சயம் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
விண்டோஸ் மொபைல் போன்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சப்போர்ட் கொடுத்து வருவதை நிறுத்த உள்ளதாகவும், இதனால் விண்டோஸ் போன்களுக்கான கடைசி வாட்ஸ்அப் அப்டேட் வரும் ஜூன் மாதம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி அந்த அப்டேட் தற்போது வந்து பலரையும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கச் செய்தது.

அதாவது விண்டோஸ் போன்களுக்கென்று பிரத்யேகமான UWP என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த புதிய செயலி விண்டோஸ் டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ் போன்களில் வேலை செய்யும் என்பதால், பலரும் இதனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அதற்கேற்ப விண்டோஸ் போன்களுக்கென்று பிரத்யேகமான UWP என்ற செயலி இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே சமயம் ஆண்ட்ராய்டு v2.3.7 மற்றும் iOS போன்களில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் செயலி இயங்குவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.