Apps

200 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்!!

வாட்ஸ்அப் செயலி உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலி ஆகும். பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டி அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் பேஸ்புக்கில் அக்கௌண்ட்டினை கொண்டு உள்ளனர். பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக வாட்ஸ் அப் அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக உலா வருகிறது.

சாதாரண மெசேஜ்ஜிங்க் செயலியின் மூலம் பலரும் தகவல்களைப் பரிமாற்றம் செய்துவந்த நிலை தற்போது மாறியுள்ளது. அதாவது தகவல் பரிமாற்றத்தின் முதல் அடிப்படை செயலியாக வாட்ஸ் அப்பே வலம் வருகிறது.

200 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்!!

வாட்ஸ் அப்பின் மூலம் கூகுள் லொகேஷன், டாக்குமெண்ட் அனுப்புதல் என பல வகையான செயல்களையும் செய்ய முடியும். தற்போது இந்த வாட்ஸ் அப் செயலி, உலகளவில் 200 கோடியை கடந்துள்ளது.

தற்போது வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 200 கோடி எட்டியதை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பே அம்சம் விரைவில் பயனுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்திற்கும் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

போன் இல்லாமலேயே வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டுமா?

TechNews Tamil

வாட்ஸ் அப்பில் உள்ள இந்த சேவை பேஸ்புக்கிலும் வருகிறது!!

TechNews Tamil

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள்: ரூ.20,000 தள்ளுபடியினைப் பெற்றுள்ள கேமிங்க் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil