Apps

பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை!!

வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என்று தெரிவித்திருந்தது.

விண்டோஸ் துணையிலான அனைத்து போன்களிலும் வாட்ஸ்அப்பினை தடை செய்தது.

அதே போல் ஆண்ட்ராய்டு v2.3.7  மற்றும் iOS  போன்களில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் செயலி இயங்குவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை!!

தற்போது அந்தக் கருத்தினை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், ஆண்ட்ராய்டு v2.3.7  மற்றும் iOS  போன்களில் இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியே வாட்ஸ் அப்பினை பயன்படுத்தும் கடைசிநாளாக இருக்கும்.

மேலும், இந்த பயனர்கள் chats history- யினை 31 ஆம் தேதிக்கு முன்னர் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த போன்களில் உள்ள chats ஐ ஓப்பன் செய்து பார்க்க முடியாது.

இந்தப் பயனர்களுக்கு புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை மீண்டும் சரிபார்த்தல் போன்றவைகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா பற்றிய தகவல்களுக்காக அறிமுகமாகியுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட் சேவை!!

TechNews Tamil

வெறும் 10MB அளவில் ஆப்லைனில் இயங்கும் கூகுள் கேலரி ஆப் அறிமுகம்!

TechNews Tamil

ஜூம் வீடியோ கால் மூலம் மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர் அரசாங்கம்!!

TechNews Tamil