Gadgets

ஸ்மார்ட் டிவிக்கும் ஆண்ட்ராய்டு டிவிக்கும் என்னதான் வித்தியாசம்?

ஸ்டாண்டர்ட் டிவி ஆனது, HD Ready, Full HD அல்லது 4K display போன்ற Panel விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

இவைகள் HDMI port, Analog cable port-கள் மற்றும் USB port போன்ற வழக்கமான இணைப்பு விருப்பங்களைக் கொண்ட அடிப்படை டிவிக்களாக இருக்கும். போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ் அல்லது யூ.எஸ்.பி டிரைவிலிருந்து மீடியா கோப்புகளை Read மற்றும் Playback செய்ய உதவும் அடிப்படை மென்பொருள்களை கொண்டிருக்கும். கூறப்படும் மீடியா கோப்புகளில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இசை ஆகியவைகள் அடங்கும். 

ஸ்மார்ட் டிவிக்கும் ஆண்ட்ராய்டு டிவிக்கும் என்னதான் வித்தியாசம்?



இந்நாட்களில் ஸ்மார்ட் டிவிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. ரூ.7,299/- தொடங்கி (Noble Skiodo Smart TV) வாங்க கிடைக்கிறது. மேலும் ரூ.15,000/- என்கிற பட்ஜெட்டின் கீழ் iFFALCON, Kodak, JVC, Xiaomi மற்றும் Thomson போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவி ஒன்றையும் நீங்கள் வாங்கலாம்.

ஸ்மார்ட் டிவிக்கள் ஆனது அவற்றில் பயன்படுத்தப்படும் இயக்க முறைமையின் (ஓஎஸ்) கீழ் வேறுபடும். அதாவது உற்பத்தியாளரைப் பொறுத்து, இந்த டிவிக்கள் ஆனது WebOS, Tizen, HomeOS அல்லது சில Custom Linux-based OS கொண்டு இயங்கும். 


இதர டிவியுடன் ஒப்பிடும் போது, ஒரு ஸ்மார்ட் டிவியை எது வேறுபடுத்தும் என்றால் – அதன் App availability தான். அதாவது ஒரு ஸ்மார்ட் டிவியின் வழியாக யூடியூப், நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் பல போன்ற பிரபலமான ஆப்ஸ்களை நீங்கள் அணுகலாம்.

இந்த OTT ஆப்ஸ் மற்றும் Subscription மூலம், உங்களுக்கு பிடித்த சேனல்களையும், திரைப்படங்களையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். எந்தவொரு பிரச்சினையும் இல்லாத ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்க உங்களிடம் நல்ல இணைய இணைப்பு தேவை என்பதை நினைவில் கொள்ளவும். 


Related posts

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள 32-இன்ச் Mi TV Pro E32S ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி புதிய க்ரோம்புக் 2-இன்-1 சாதனம்!

TechNews Tamil

இந்தியாவில் நோக்கியா டி20 டேப்லெட் மாடல் வெளியீடு!

TechNews Tamil