தற்போது, ஜூம் பயன்பாட்டால் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது, அதாவது சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஜூம் செயலியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது ஜூம் பயன்பாட்டை பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் போன்றவை ஹேக்கிங்க் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஜூம்செயலிக்கு மாற்று போல் கூகுள் நிறுவனம் ஹேங்அவுட்ஸ் மீட் என்ற செயலியை அப்டேட் செய்து மீண்டும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த செயலியானது இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் ஆகவுள்ளது. மேலும் இந்த சேவையின் ப்ரீமியம் வெர்ஷனும் ஜூலை 1 வரை கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் ஆன்லைன் பாடம் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு ஜூம் செயலிபோலவே பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இந்த சேவையில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இருந்தன, அதாவது இதன் மொத்த கட்டுப்பாடும் ஆசிரியர்கள் வசம் மட்டுமே இருக்கும். இதனால் இது பாதுகாப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் பாதுகாப்பு காரணமாக இது வரவேற்பினைப் பெறும்.
மேலும் ஜூம் செயலியில் உள்ள மற்றொரு வேறுபாடாக ஒரே நேரத்தில் மீட்டிங்கில் இருக்கும் பலரையும் ஒரே திரையில்
பார்க்க முடியாது. ஆனால் இதனை வெளியிடும்போது அப்டேட் செய்து ஜூம் செயலி போலவே வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.