கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 4,87,286 பேர் இதுவரை உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 21,000 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் இந்தியாவில் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை தீவிரமானதன் காரணமாக, தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அமேசான் இந்தியா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது,

அதாவது மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருட்களுக்கு அமேசான் முன்னுரிமை வழங்கி வருகிறது.
இந்த சேவை மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றநிலையில், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு அமேசானுக்கு போட்டியாக இருந்துவரும் பிளிப்கார்ட் நிறுவனமும் இன்று முதல் தனது வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஷாப்பிங்கையும் நிறுத்தியுள்ளது.
மேலும் வீட்டுப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்கத் திட்டமிட்டுள்ளது.