Apps

போன் நம்பர் வேண்டாம்.. இனி ஈமெயில் மூலமே கால் பண்ணலாம்!!

கூகுள் நிறுவனத்தின் டுயோ மூலம் வீடியோ கால்கள் பயன்பாட்டினை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் அசிஸ்டண்ட் செயலி பயன்படுத்தினால் கூகுள் அசிஸ்டண்டில் குரலால் கட்டளையிட்டோ  அல்லது வீடியோ கால் என உள்ளீடு கொடுத்து டுயோ வீடியோ கால் செய்ய முடியும்.

துவக்கத்தில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-ஓஎஸ் டுயோவின் சமீபத்திய வெர்ஷனில் வெளியிடப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர், ஆண்ட்ராய்ட் டுயோ செயலி டேப்லட்டுகளிலும் பயன்படுத்தும்படியாக புதிய அம்சங்களைப் பெற்றது. இந்த புதிய அம்சம் வீடியோ விண்டோவை திரை முழுமைக்கும் காண்பித்து வருகிறது.

போன் நம்பர் வேண்டாம்.. இனி ஈமெயில் மூலமே கால் பண்ணலாம்!!

இந்த நிலையில் கூகுள் டுயோ குறித்த ஒரு சிறப்புமிக்க அம்சம் தற்போது வெளியாகியுள்ளது, அதாவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் போனே இல்லாமல் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும் என்பதுதான் அந்த சிறப்புமிக்க அம்சமாகும்.

அதாவது தங்களின் மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த செயலிக்கு ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஈமெயில் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி இன்னும் 2 மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

Related posts

அடுக்கடுக்கான அம்சங்களுடன் தயார் ஆகிவருகிறது ஃபேஸ்புக் மெசெஞ்சர்!!

TechNews Tamil

Flipkart Big Diwali Sale.. ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தள்ளுபடி!

TechNews Tamil

அறிமுகமானது பேடிஎம் நிறுவனத்தின் மினி ஆப் ஸ்டோர்!

TechNews Tamil