Apps

இந்த மாத இறுதிக்குள் வெளியாகிறது வாட்ஸ் ஆப் பே!!

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

வாட்ஸ் ஆப் நிறுவனம் யூபிஐ  சார்ந்து இயங்கும் பணப்பரிமாற்ற சேவையை வழங்க உள்ளது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை இயக்க தேசிய உரிமக் கழகம் எனப்படும் NPCI ஒப்புதல் வழங்கியது.

இந்த மாத இறுதிக்குள் வெளியாகிறது வாட்ஸ் ஆப் பே!!

தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளமையால் வாட்ஸ் அப் பே ஆப் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப், இந்தியாவில் விரைவில் வாட்ஸ்ஆப் பே அம்சத்தினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த டிஜிட்டல் கட்டண சேவை ஒரு கட்டமாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப் பே அம்சம் முதல் கட்டமாக சுமார் 10 மில்லியன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts

பேஸ்புக் பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டும்!

TechNews Tamil

எஸ்பிஐ மற்றும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய பாரத் இன்ஸ்டா பே!!

TechNews Tamil

வாட்ஸ் அப் வேண்டாம்.. சிக்னல் மற்றும் டெலிகிராமுக்கு மாறிய பயனர்கள்!!

TechNews Tamil