Apps

6 மாசம் வெயிட் பண்ணுங்க… ரெடியானது வாட்ஸ் ஆப் பே!!

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பேமண்ட் சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்-ல், ”யூபிஐ” சார்ந்து இயங்கும் பணப்பரிமாற்ற சேவையை வழங்க முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ் ஆப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது.

தற்சமயம் இச்சேவைக்கான வெளீயீடு,  இன்னும் 6 மாதங்களில் பணத்தினை எளிதில் அனுப்பும் வகையில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 மாசம் வெயிட் பண்ணுங்க… ரெடியானது வாட்ஸ் ஆப் பே!!

 இந்திய அரசு கட்டுப்பாடுகளால் தாமதமாகி வருகிறது. மேலும் இச்சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் மற்ற அப்களை விட எளிதில் பிரபலமாகக் காரணம், பயன்படுத்தும் முறை மிக எளிதானது என்பதாலேயே ஆகும்.

பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இந்தியாவில் விரைவில் வாட்ஸ்ஆப் பே அம்சம் பயன்பாட்டினை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது புது முயற்சியாக, வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பலாம் என்ற வசதியானது நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும்.

Related posts

ஸ்விக்கி செய்த செயலால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

1 மில்லியன் டவுண்ட்லோடு.. சீன ஆப்களை ஒரே க்ளிக்கில் நீக்க உதவும் Remove China Apps!

TechNews Tamil

வாட்ஸ்அப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட்!!

TechNews Tamil