எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. டபுள்யூ30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இது 6.21 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் கொண்டதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. வைடு ஆங்கில் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டு உள்ளது.
மேலும் இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டதாக உள்ளது. இது ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. இது 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டதாக உள்ளது.