ட்விட்டர் நிறுவனம் அவ்வப்போது அதன் பயனர்களுக்கு சிறப்பான அம்சங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் 24 மணி நேரத்தில் மறைந்துபோகும் ஃப்ளீட் வசதியை பயனர்களுக்கு வழங்கியது. தற்போது ஐஒஎஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு ட்விட்டர் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் வாய்ஸ் ட்விட் பதிவிட முடியும். அதாவது வாட்ஸ் ஆப்பில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஆடியோ மெசேஜ் என்ற பயன்பாட்டினை ஒத்ததாக ட்விட்டரில் பயனர்கள் இனி ஆடியோ மெசேஜ்களைப் பதிவிட முடியும்.
அதாவது பேச விரும்புவதை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்களுக்குள் பேசி அவற்றை ஆடியோ வடிவில் பதிவிட முடியும். இதன்மூலம் ஃபாளோவர்கள் வாய்ஸ் ட்விட்களை கேட்கலாம்.
ஒவ்வொரு ஆடியோ வாய்ஸ் ட்விட் அளவு அதிகபட்சம் 140 நொடிகள் ஆகும், இந்த வாய்ஸ் ட்வீட் ஆனது ஐஒஎஸ் பயனர்களுக்கு தனி விண்டோவில் கிடைக்கிறது. முதற்கட்டமாக வாய்ஸ் ட்விட் என்னும் இந்த அம்சம் சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.