உலகம் முழுவதும் கூகுள் பலவிதமான சேவைகளை வழங்கி வருகிறது, அவ்வப்போது ஆப்ஸ்கள் வெளியிடுவதும், அப்டேட்டுகள் செய்வதுமாக அசத்தி வருகிறது.
சில தினங்களுக்கு முன் கூகுள் தனது புதிய அப்டேட்டாக ‘வாய்ஸ் சர்ச்’ அப்டேட்டை அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள கூகுள்.காம் இணையதளத்திற்கு “வாய்ஸ் சர்ச்” என்னும் வசதி இல்லாமல் இருந்தது ஒரு பெரும் குறையாக இருந்தது.
. இந்த ‘வாய்ஸ் சர்ச்’ வசதியை கூகுள்.காம்மில் உள்ள சாம்பல் நிற மைக்கை தேர்தெடுப்பதன் மூலம் பயன்படுத்த முடியும்; மேலும் இதுபற்றிய வீடியோக்களையும் அறிமுகத்தின்போதே கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் எப்படி வாய்ஸ் சர்ச் வசதியைத் தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது, இதனுடைய பயன்கள் என அனைத்துவிதமான தகவல்கள் உள்ளது.
இந்த ஜகான் (icon) கூகுளின் ஹோம் பேஜ் மற்றும் சர்ச் தளத்திலும் இடம்பெற்றுள்ளது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்டு மூலம் கட்டளைகளை நாம் சொல்ல முடிகின்ற நிலையில், இந்த அப்டேட் டைபிங்கின் அவசியத்தை குறைக்கிறது.
இது அறிமுகப்படுத்தபட்டபோது பெரிய அளவிலான வரவேற்பினைப் பெறவில்லை எனினும், தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருவதுடன், நாளுக்கு நாள் இதன் பயனர்கள் அதிகரித்துள்ளனர்.