டிராய் அறிக்கையின்படி, இந்தியாவில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட நெட்வொர்க்கில் வோடபோன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், இன்டர்நெட் வேகத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வோடபோனில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 4ஜி டேட்டா, வாய்ஸ்கால், வேலிடிட்டி ஆகியவை கூடுதலாக வழங்கப்படுகிறது. வோடபோன் வாடிக்கையாளர்கள் மறுதடவை ரீசார்ஜ் செய்யும் போது இந்த சலுகைகளை பெற முடியும்.

ரீசார்ஜ் செய்துவிட்டு *999# என்ற எண்னை டையல் செய்தால், மணி நேரம் கழித்து இந்த சலுகைகள் ஆக்டிவேட் ஆகிவிடும். வோடபோனில் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள், புதிய சந்தாதாரர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும்.
மேலும் வோடபோனில் குறிப்பிட்ட பேக்குகளுக்கு 100 சதவீத கேஷ்பேக் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. வோடபோன் மூலம் அமேசானில் பிரைமில் 1 வருட சந்தா பெறும் வாடிக்கையாளர்களுக்கு 50% கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.
லேட்டஸ்ட் பிளான்படி, வோடாபோனில் 98 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 6ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிற. இதற்கு வாய்ஸ்கால், எஸ்எம்எஸ் போன்ற கூடுதல் சலுகைகள் எதுவம் கிடையாது. வெறும் டேட்டா மட்டும் பெற முடியும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.