ஜியோ ஒவ்வொரு ஆஃபராக அறிவிக்க, அதற்கு ஈடுகொடுக்க பி.எஸ்.என்.எல், ஏர்டெல் மற்றும் வோடபோன் திணறவே செய்கின்றன. அவரவர் பங்குக்கு போட்டியிட்டு ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை திணறடிக்கின்றனர்.
தற்போது வோடபோன் மாதம் 70 ஜிபி டேட்டா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதில் அசத்தலாக, ஒரு நாளைக்கு 2.5ஜிபி என்றும், அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் போன்றவையும் இதில் அடக்கம்

கடந்த சில மாதங்களாகவே வோடபோன் நிறுவனம் ரூ .300 க்கு குறைவான மலிவான திட்டங்களை அறிவித்து வருகின்றது. தற்போது , ரூ.255 திட்டத்தை அறிமுகம் செய்தது.
மேலும் இதில் கூடுதல் வசதியாக வோடபோன் ப்ளே சந்தா வசதியும் வழங்கவுள்ளது. இதன்மூலம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.
நிச்சயம் இது ஜியோவிற்கு போட்டியான திட்டமாகும், மக்களிடம் அதிக அளவிலான வரவேற்பினைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.