ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு, கட்டணத்தை அறிவிக்க, மற்ற நெட்வொர்க்குகள் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளன.
வாடிக்கையாளர்கள் ஜியோ மீது கொண்ட அதிருப்தியினை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ஆஃபர்களை அறிவித்துள்ளன, அந்த வகையில் வோடபோன் 1ஜிபி க்கு 1ஜிபி டேட்டா என்ற டபுள் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.
வோடாபோன் ரூ.199 மற்றும் ரூ.399 பிளானுக்கு டபுள் டேட்டா ஆஃபர்களை அறிவித்துள்ளது.

வோடாபோனின் இந்த சலுகையின்மூலம் ரூ.199 பிளானுக்கு 84
ஜிபி அளவிலான டேட்டா
கிடைக்கவுள்ளது.
பழைய பிளானின்படி ரூ.199 ப்ரீபெய்ட்
ரீசார்ஜ்க்கு தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் கால், தினசரி 100
எஸ்எம்எஸ் போன்றவைகளும் கிடைத்தது. இந்த புதிய ஆஃபரின்படி 1.5 ஜிபி க்கு பதிலாக 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ரூ.399 பிளானுக்கு, தினசரிக்கு 1
ஜிபி அளவிலான டேட்டா
கிடைத்து வந்தது. இனி ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இனி இது 84 ஜிபியில்
இருந்து 168 ஜிபி ஆக மாறவுள்ளது.