வோடபோன் நிறுவனம் தற்போது அலைக்கற்றைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை செலுத்த முடியாமல் திணறி வருகின்றது. பெரிய அளவில் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் பொருட்டு, பலவகையான ஆஃபர்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.
அந்த வகையில் வோடபோன் நிறுவனம் 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்தத் திட்டங்களானது ரூ.218 மற்றும் ரூ.248 என்ற 2 விலைகளில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்களானது முதல் கட்டமாக டெல்லி, ஹரியானா வட்டாரங்களில் வழங்கப்பட்டுள்ளது, இவை இந்தியா முழுவதும் அடுத்த மாத இறுதிக்குள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த 2 திட்டங்கள் குறித்த விவரங்களைப் பற்றிய விவரங்களை நாம் இப்போது காணலாம்.
ரூ.218 திட்டம்:
இந்த ரூ.218 திட்டமானது 6ஜிபி அளவிலான டேட்டா வசதி, அன்லிமிடெட் கால்ஸ், வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 போன்றவற்றின் இலவச சந்தா போன்றவை வழங்கக் கிடைக்கின்றது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ.248 திட்டம்:
இந்த ரூ.248 திட்டமானது அன்லிமிடெட் கால்ஸ், 8ஜிபி அளவிலான அதிவேக டேட்டா, 100எஸ்எம்எஸ், வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 போன்றவற்றின் இலவச சந்தா போன்றவை வழங்கக் கிடைக்கின்றது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.