Information Technology

கட்டணத்தினை தாறுமாறாக உயர்த்திய வோடபோன்!!

அலைக்கற்றைக்கு பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.92 ஆயிரம் கோடி செலுத்த வேண்டி இருந்தது. இதில் நிலுவைத் தொகையாக ரூ. 41 ஆயிரம் கோடி மற்றும் 1.33 லட்சம் கோடி செலுத்தப்பட வேண்டி உள்ளது.

அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களும், நிலுவைத் தொகையை, மார்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வோடபோன் இந்த நிலுவைத் தொகையினை இரண்டு கட்டமாக செலுத்துவதாக அறிவித்தது, அதாவது பிப்ரவரி 17 ஆம் தேதி ரூ.2,500 கோடி செலுத்துவதாகவும், மீதமுள்ள ரூ.1,000 கோடியை பிப்ரவரி 21 ஆம் தேதி செலுத்துவதாகவும் கூறியது. ஆனால் நீதிமன்றம் முடியவே முடியாது ஒரே தவணையில் மார்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

கட்டணத்தினை தாறுமாறாக உயர்த்திய வோடபோன்!!

நஷ்டத்தில் இருந்து தப்பிக்கவும், மீதமுள்ள நிலுவைத் தொகையினை டிராய்க்கு செலுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளது வோடபோன் நிறுவனம். இதனால் வோடபோன் தங்களது திட்டங்களுக்கான விலையினை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதாவது வோடாபோன் கூறியுள்ளதாவது, “வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும், அதேபோல் அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையானது நிமிடத்திற்கு 6 பைசா என்ற கோரிக்கையினை தகவல் தொடர்பு நிறுவனத்திடம் வைத்துள்ளது.

Related posts

ஏர்டெல் வழங்கும் இலவச லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி!

TechNews Tamil

குறைந்தபட்ச கட்டாய ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்!

TechNews Tamil

வரி ஏய்ப்பு செய்ததற்காக கூகுள் நிறுவனத்திற்கு அபாரதம் விதித்த பிரான்ஸ் அரசு

TechNews Tamil