Information Technology

229 ரூபாயில் ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்த வோடபோன்!!!

ஜியோவினை பின்னுக்குத் தள்ளி, முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், வோடபோன் ஆஃபர்களை வாரி இறைத்து வருகிறது. தற்போது அந்தவகையில் 229 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை வழங்கி மற்ற நெட்வொர்க்குகளை திணற செய்துள்ளது.

வோடபோன் வழங்கும் இந்தத் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, போன்றவற்றினை வழங்குகிறது.

ஆனால் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளை பெறலாம்.

229 ரூபாயில் ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்த வோடபோன்!!!


மேலும் இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. ரூ.229 ஐ போலவே வோடபோனின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டமானது இது ஒரு நாளைக்கு 1.6 ஜிபி டேட்டாவையும், மற்றொரு திட்டமான ரூ.199 ரீசார்ஜ் ஆனது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.


ஜியோவின் ரூ .222 திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1000 மற்ற நெட்வொர்க்குகளுக்கான நிமிடங்கள் போன்றவைகள் இதில் கிடைக்கும்.

Related posts

சேவைக் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ள வோடபோன் மற்றும் ஜியோ!!

TechNews Tamil

சென்னையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது ஜியோ தான் – டிராய் வெளியிடு

TechNews Tamil

ரூ. 49 சலுகையை ரூ. 79 சலுகையாக மாற்றிய ஜியோ!!

TechNews Tamil