Information Technology

பி.எஸ்.என்.எல் மற்றும் ஜியோவைத் தொடர்ந்து 100 மில்லியன் பயனர்களுக்கு இலவச சலுகைகளை அறிவித்துள்ள வோடபோன்!!

கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள் பலரும் திணறி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜுக்கான வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டித்து இன்கமிங் அழைப்புகளைத் தடையில்லாமல் பெற உதவி செய்தல், ரூ. 10 இலவச டாக்டைம் போன்றவற்றினை வழங்குகிறது.

இதனைத் தொடர்ந்து ஜியோ நெட்வொர்க்கும் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு 100 நிமிட இலவச அழைப்புகள், 100 இலவச எஸ்எம்எஸ் போன்றவற்றினை வழங்குவதாய் அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் மற்றும் ஜியோவைத் தொடர்ந்து 100 மில்லியன் பயனர்களுக்கு இலவச சலுகைகளை அறிவித்துள்ள வோடபோன்!!

மேலும், இந்த சலுகைகள் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையின் வேலிடிட்டி முடிந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இன்கம்மிங் வாய்ஸ் கால்களைப் பெறமுடியும் என்றும் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவ வேண்டும் என்ற முனைப்பில் இலவச சேவைகளை வழங்கி வருகிறது.

வோடாபோன் மற்றும் நிறுவனங்கள் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தினை 2020 ஏப்ரல் 17 வரை நீட்டித்துள்ளது.

மேலும், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் குறைந்த வருமானம் கொண்ட பயனர்களைக் கண்டறிந்து, சுமார் 100 மில்லியன் பயனர்களின் அக்கவுண்டில் ரூ.10 மதிப்பிலான டாக்டைம் வரவை வழங்குவதாக அறிவித்துள்ளது

Related posts

வோடபோனின் 9 ரூபாய் மற்றும் 21 ரூபாய்க்கான திட்டங்கள்!!

TechNews Tamil

6ஜி சேவைப் பணிகளை துவக்கி ஷாக் கொடுத்த சீனா

TechNews Tamil

ஊரடங்கு உத்தரவு: ரீசார்ஜ் செய்யத் திணறும் வாடிக்கையாளர்களுக்கு Jio கொண்டுவந்த புதிய ரீசார்ஜ் முறை!!

TechNews Tamil