வோடபோன் நிறுவனம் #RechargeforGood என்ற புதிய திட்டத்தினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்தத் திட்டத்தின் மூலம் மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்து, கமிஷனை தொகையைப் பெற முடியும்.
இந்த #RechargeforGood என்ற திட்டத்தின்கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 65 சதவீதம் வரை கூப்பனாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கூப்பனை பெற விரும்பும் பயனர்கள் கட்டாயம் மைவோடபோன் செயலி அல்லது மைஜடியா செயலி மூலம் மட்டுமே ரீசார்ஜ்ஜினை மேற்கொள்ள வேண்டும்.

மற்ற செயலி அல்லது ஆன்லைன் ரீசார்ஜ்களுக்கு இது பொருந்தாது. இந்த செயலில் வழக்கமான் ஆப்களைப் போல் ஒரு அக்கௌண்ட் ஓப்பன் செய்து, நமக்கான அக்கௌண்டிலிருந்து மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 6% வரை கூப்பன் தொகை நமது மைவோடபோன் செயலி அல்லது மைஜடியா செயலியில் சேர்க்கப்பட்டு விடும்.
அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது இந்த கூப்பனைப் பயன்படுத்தி நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
வோடபோனின் #RechargeforGood என்ற இந்தத் திட்டமானது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் 4% கமிஷன் தொகையினை வழங்கும் விதமாக ஜியோவும் ஒரு திட்டத்தினைக் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.