பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மார்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிலுவைத் தொகையினை செலுத்த முடியாமல் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த நிறுவனங்களின் சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் ஏர்டெல் தனது ரூ.149 திட்டத்தினை, ரூ. 100 உயர்த்தி ரூ.249 என்ற திட்டமாக மாற்றம் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களும் தங்களுடைய கட்டணத்தை உயர்த்தலாம் என பயனர்கள் கூறிவந்த நிலையில் அது உண்மையாகி உள்ளது.
அதாவது நஷ்டத்தில் இயங்கி வரும் வோடபோன் நிறுவனம் நிலுவைத் தொகையினை செலுத்த போராடி வரும் நிலையில், கட்டணத்தினை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
இதேபோல் ஜியோ நிறுவனமும், விலையினை ஏற்கனவே உயர்த்துவது குறித்த முடிவினை எடுத்துவிட்டதாகவும், விரைவில் அந்தக் கட்டண உயர்வினை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.