Mobile

அதிரடியாக களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் Y51s ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் சீனாவில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y51s ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 X 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

விவோ Y51s ஸ்மார்ட்போன் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 880சிப்செட் உடன் மாலி-ஜி76 எம்பி3 ஜிபியு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

அதிரடியாக களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் Y51s ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை விவோ Y51s ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, டூயல் சிம் 4 ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 5.0, டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

3 நாட்களுக்கு விற்பனையினைத் துவக்கி உள்ள Redmi 8A Dual ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்ற நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil