மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் நேற்று இந்தியாவில் விவோ ஒய் 31 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் 6.58′ இன்ச் 1080 × 2408 பிக்சல்கள் கொண்ட தீர்மானத்துடன் கூடிய முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை அண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டதாகவும் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் பொக்கே சென்சார், 2 மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 16 மெகா பிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் 4 ஜி எல்டிஇ புளூடூத் 5.0 டூயல்-பேண்ட் வைஃபை எஃப்எம் ரேடியோ ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரேசிங் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.