விவோ தனது அடுத்த சீரியஸ் ஸ்மார்ட்போனான Vivo NEX 3 என்ற ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகம் செய்தது.
இந்த விவோ நெக்ஸ் 3 இரண்டு வகைகளில் வந்துள்ளது. ஒன்று 4ஜி கொண்டும், மற்றொன்று 5ஜி கொண்டும் அறிமுகமாகியுள்ளது.
இந்த போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வகைகளில் வெளியாகிறது.
1. பேசிக் மாடல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி – ரூ.58,000
2. அடுத்த மாடல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி – ரூ.63,000
விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.89 இன்ச் அளவிலான POLED Waterfall FullView டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
விவோ நெக்ஸ் 3 உடன் இணைந்து, விவோ நிறுவனம் தனது முதல் ப்ளூடூத் இயர்போனையும் அறிமுகப்படுத்தியது. இந்த இயர்போன் க்வால்காம் புளூடூத் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.