கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல நாடுகளிலும் பல வகையான தொழில்களும் முடங்கி உள்ளன. தொற்று மேலும் பரவாமல் தடுக்க உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவானது 1 மாதம் முதல் 3 மாதங்கள் வரை பிறப்பிக்கபட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான ஆன்லைன் விற்பனைகள் எதுவும் நடைபெறவில்லை. மொபைல் நிறுவனங்களும் இதனால் கடும் நஷ்டத்தினை சந்தித்துவருகின்றன.

அதனால் ஊரடங்கானது எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியாத நிலையில், தனது போன் விற்பனையினை வித்தியாசமான முறையில் துவக்க விவோ முடிவு எடுத்துள்ளது.
அதாவது போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்காகவே இந்த புதிய திட்டமானது விவோ நிறுவனத்தால் துவக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தேவையில்லை.
விவோ நிறுவனத்தின் இந்தத் திட்டத்தின் படி மொபைல் போன் வாங்க விரும்புவோர் தங்களின் சந்தேகங்களை விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கேள்விகளாக எழுப்பலாம்.
வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விவோ தரப்பில் பதில் அளிக்கப்படும், மேலும் எஸ்எம்எஸ் சார்ந்த கனெக்டிவிட்டி மூலம் இயங்கும் இந்தத் திட்டமானது மே 12 ஆம் தேதிக்குள் அமலுக்கு வந்துவிடும் என விவோ அறிவித்துள்ளது.