Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் தனது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1.விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போனின் விலை – ரூ.22,524

விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இuத் 1080 x 2080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதியைப் பொறுத்தவரை கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மறறும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது.

விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 756ஜி சிப்செட் மற்றும் அட்ரினோ 620ஜிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 108 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, புளூடூத் வி 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மூன்று கேமிராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2!

TechNews Tamil

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது எப்படி?

TechNews Tamil