Mobile

அசத்தலான அம்சங்களுடன் பிப்ரவரி 29 ஆம் தேதி அறிமுகமாகிறது விவோ இசட்6 5ஜி!

விவோ நிறுவனம் புதிய விவோ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனை பிப்ரவரி 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

விவோ இசட்6 ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த விவோ இசட்6 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரியினை நீட்டிப்பதாய் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் பிப்ரவரி 29 ஆம் தேதி அறிமுகமாகிறது விவோ இசட்6 5ஜி!

கேமராவைப் பொறுத்தவரை இந்த விவோ இசட்6 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த விவோ இசட்6 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

OnePlus 7T இன் அதிரடியான சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம்!

TechNews Tamil