Mobile

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

சீனாவில் அறிமுகமாகியுள்ள Vivo Z5-ன் அடிப்படை மாதிரியானது 1,598 யுவான்கள் என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. அதாவது இந்திய சந்தையில் ரூ.16,000/- என்கிற மிட்ரேன்ஜ் பட்ஜெட்டின் கீழ் விற்பனைக்கு வரும் என்று அர்த்தம்.

 
விவோ இசட்5-ன் அடிப்படை மாடலான 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஆனது 1,598 யுவான்களுக்கும், மற்ற மூன்று மெமரி வேரியண்ட்களான 6 ஜிபி ரேம் + 128 ஜிபி, 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆகியவைகள் முறையே 1,898 யுவான்கள், 1,998 யுவான்கள்  மற்றும் 2,298 யுவான்கள்  என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. 


1080 x 2340 பிக்சல்கள் அளவிலான 6.38 இன்ச் முழு எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 என்கிற அளவிலான ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை பெற்றுள்ளது.

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

Vivo Z5-ன் Waterdrop Notch டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா உட்பொதிக்கப்பட்டுள்ளது. அது f/ 2.0 லென்ஸ் கொண்ட ஒரு 32MP அளவிலான கேமரா ஆகும். பின்புற பேனலில் ஸ்மார்ட்போனின் Triple Camera அமைப்பு இடம்பெற்றுள்ளது.

விவோ இசட்5 ஆனது 22.5W Flash Charge Fast Charging தொழில்நுட்பத்திற்கான ஆதரவு கொண்ட 4,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போனில் OTG reverse charging ஆதரவை கொண்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

 In-Display கைரேகை சென்சாரை கொண்டுள்ள விவோ இசட்5 ஆனது Aurora Illusion, Bamboo Forest Night மற்றும் Holographic Illusion ஆகிய மூன்று வண்ண பதிப்புகளின் கீழ் வாங்க கிடைக்கும்.

Related posts

சீனாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி W21 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

iOS 13 மொபைலின் டேட்டா இணைப்புக் கோளாறு பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன ஆப்பிள்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil