விவோ நிறுவனம் விரைவில் தற்போது புதிய விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் 6.38-இன்ச் முழு எச்டி சூப்பர் டிஸ்பிளே வசதி உள்ளது, மேலும் 1080பிக்சல் தீர்மானம் உள்ளது, இதில் உள்ள பாதுகாப்பு வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இது இருப்பதால் மிகச் சிறந்த வரவேற்பினைப் பெறும்.

மேலும் இதில் 48எம்பி பிரைமரி சென்சார் வசதியுடன் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், AI எனப்படும் பல்வேறு அம்சங்கள் பெரிய அளவில் பேசப்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது, அதனுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரலாம் என்று தெரிகிறது.
விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இதில் உள்ளது.