விவோ நிறுவனம் இன்று புதிய விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு
எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080×2340
பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த
சாதனம் வெளிவரும்.
இந்த
ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி
இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த
ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை
நுண்ணறிவு அம்சம் உள்ளது. இசெட்1 ப்ரோ சாதனத்தின்
பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த்
சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி
செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த
ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.