விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y91C 2020 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பங்களாதேஷில் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. விவோ ஒய் 91 சி 2020 ஸ்மார்ட்போன் விலை – ரூ.8400
விவோ ஒய் 91 சி 2020 ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 722 × 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

விவோ ஒய் 91 சி 2020 ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமராவினை பின்புறத்தில் கொண்டுள்ளது மேலும் 5எம்பி செல்பீ கேமராவினை முன்புறத்தில் கொண்டுள்ளது.
மேலும் ஃபேஸ் பியூட்டி, டைம்-லேப்ஸ், பால்ம் கேப்சர் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கேமரா ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4030 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்டிஇஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்10 க்ளோனாஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.