Mobile

இந்தியாவில் களம் இறங்கிய விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ ஒய் 51 ஏ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் கிரிஸ்டல் சிம்பொனி போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.58′ இன்ச் 1080 x 2408 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவில் களம் இறங்கிய விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை ஸ்டோரேஜ் கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் கூடுதல் சென்சார், 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் பேண்ட் வைஃபை புளூடூத் 5.0 ஜி.பி.எஸ் யூ.எஸ்.பி டைப்-சி ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும், மேலும் 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

அறிமுகமானது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கேலக்ஸி ஏ30எஸ்!

TechNews Tamil

ஆன்லைன் வெளியீடாக அறிமுகமானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விவோ Y20T ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil