Mobile

பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன்!!

சில மாதங்களுக்கு முன்னர் விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த விவோ ஒய் 51 (2020) ஸ்மார்ட்போன் ஆனது 6.38 இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல் திர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டதாக உள்ளது. விவோ ஒய் 51 (2020) ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

விவோ ஒய் 51 (2020) ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 48எம்பி பிமைரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

விவோ Y51 (2020) ஸ்மார்ட்போன் ஆனது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் வெளியாகியுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடூ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

ரூ.1000 வரை எக்சேஞ்ச் வசதி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ!!

TechNews Tamil

சீனாவில் களம் இறங்கவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

9,999 ரூபாயில் எச்.டி.சி வைல்ட்பயர் X!

TechNews Tamil